செய்க தவம் செய்க தவம்

 செய்க தவம் செய்க தவம்

தவம் உனக்கு வேண்டியதைத் செய்து விடும். 


பிறக்கின்றோம், வளர்கின்றோம், வாழ்கின்றோம் நாம் 

பேருலகில் இன்பதுன்பம் அனுபவித்து

இறக்கின்றோம். 

இதுவேதான் என்றும் என்றும் 

எல்லா ஜீவன்களுக்கும் பொது. இவ்வுண்மை மறக்காத விழிப்புடனே, ஒழுக்கத்தோடு, மதி உடலைப் பயன்படுத்தி உலக வாழ்வை

சிறப்பாக அனுபவித்து, 

இயற்கைக் கொப்ப,

சிந்தனையில் அமைதி பெற முயற்சி செய்வோம்.


இச்சையின்றியே நாம் உடலாய் வந்தோம் 

இச்சைக்கடங்காமலே  உடல் மாய்ந்திடும் 

இச்சையுள்ளவரையே நம் வாழ்வாகும் 

இச்சை ஒழித்திட ஏன் முயல்கின்றீர்கள் 


இச்சை என்பது தேவையுணர்வாகும் 

இச்சை மீற செயல் வேகமாகிவிடும் 

இச்சை செயலில் இணைந்திடும், மீறிடும் 

இச்சை பழக்கத்தால் எண்ணங்களாகிவிடும் 


இச்சை என்பதியற்கை எழுச்சியே 

இச்சிப்பதே ருசு  இயங்கும் உடலுக்கு 

இச்சையில் கற்பனை எழுவதை ஆய்ந்தறி 

இச்சித்தனுபவித்திச்சை இயல்பாய் பார். 


வாழ்க வையகம் வாழ்க வையகம் 

வாழ்க வளமுடன் சந்தோஷம் 

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி




Comments

Popular posts from this blog

துறவறம்

தாழ்வு மனப்பான்மை...