Posts

செய்க தவம் செய்க தவம்

Image
 செய்க தவம் செய்க தவம் தவம் உனக்கு வேண்டியதைத் செய்து விடும்.  பிறக்கின்றோம், வளர்கின்றோம், வாழ்கின்றோம் நாம்  பேருலகில் இன்பதுன்பம் அனுபவித்து இறக்கின்றோம்.  இதுவேதான் என்றும் என்றும்  எல்லா ஜீவன்களுக்கும் பொது. இவ்வுண்மை மறக்காத விழிப்புடனே, ஒழுக்கத்தோடு, மதி உடலைப் பயன்படுத்தி உலக வாழ்வை சிறப்பாக அனுபவித்து,  இயற்கைக் கொப்ப, சிந்தனையில் அமைதி பெற முயற்சி செய்வோம். இச்சையின்றியே நாம் உடலாய் வந்தோம்  இச்சைக்கடங்காமலே  உடல் மாய்ந்திடும்  இச்சையுள்ளவரையே நம் வாழ்வாகும்  இச்சை ஒழித்திட ஏன் முயல்கின்றீர்கள்  இச்சை என்பது தேவையுணர்வாகும்  இச்சை மீற செயல் வேகமாகிவிடும்  இச்சை செயலில் இணைந்திடும், மீறிடும்  இச்சை பழக்கத்தால் எண்ணங்களாகிவிடும்  இச்சை என்பதியற்கை எழுச்சியே  இச்சிப்பதே ருசு  இயங்கும் உடலுக்கு  இச்சையில் கற்பனை எழுவதை ஆய்ந்தறி  இச்சித்தனுபவித்திச்சை இயல்பாய் பார்.  வாழ்க வையகம் வாழ்க வையகம்  வாழ்க வளமுடன் சந்தோஷம்  எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க  அருட்தந்தை வேதாத்த...

துறவறம்

Image
  மௌனத்தின் அலைகள் இராம் மனோகர் கேள்வி - எனக்கென்னவோ இல்லறம் பெரும் தடையாகவே தோன்றுகிறது. ஆனால், துறவு மேற் கொண்டால் நான் எங்கே செல்வது ?    எல்லாவற்றையும் துறந்தவன் எங்கு வேண்டானாலும் இருப்பான். சௌகர்யங்களையும், வசதி வாய்ப்புகளையும் தேடிக் கொண்டிருக்க மாட்டான். துறவைப் பற்றிய நம் கண்ணோட்டம் தவறானது. நம் முன்னோர்கள் துறவறத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்தார்களோ அதைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், புனிதமானதாகவும் இல்லறத்தைப் போற்றினார்கள். ஏனென்றால், ஞானத்தை அடைவதோடு சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் துறவிகளை ஆதரிப்பதோடு தங்கள் இல்லற தர்மத்தையும் சீரோடும், சிறப்போடும் நடத்தி மேன்மையடைபவர்கள் இல்லறத்தார்தான். நம் பாரத தேசத்தின் கலாச்சாரம் மனிதனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கிறது. அது இந்த உலகில் இருந்து இயற்கையாக மனிதன் அடையும் எந்த இன்பத்தையும் வெறுத்து ஒதுக்க வேண்டும் என்று சொல்வதே இல்லை. அந்த இன்பங்களை அதிகமாகப் பெறுவதற்கே வழி வகைகளைக் கற்றுத் தருகிறது. ஆனால், அந்த இன்ப நுகர்ச்சியே பெருந் துன்பத்திற்கும் காரணமாக அமைந்து விடக் கூடாது என்பதிலும் மி...

தாழ்வு மனப்பான்மை...

Image
 தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் கடவுளை வேண்டி தவமிருந்தபின் அவன் முன்னே கடவுள் தோன்றினார். அவன் கடவுளிடம் என்னை ஏன் இப்படி படைத்தீர்கள்? என் வாழ்க்கையின் மதிப்பு தான் என்ன என்று கேட்டான். கடவுள் அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து இதன் மதிப்பை அறிந்துவா ஆனால் விற்கக்கூடாது என்றார். அவன் அக்கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்ததற்கு, அக்கல்லுக்கு பதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதாக கூறினான். அதையே ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் கேட்டதற்கு ஒரு மூடை கிழங்கு தருவதாக சொன்னான். நகைக்கடையில் காண்பித்ததற்கு 50000 பொற்காசுகள் தருவதாக சொல்லவே, இவன் மறுக்க, ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக சொன்னான். மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம் காண்பித்து அதன் மதிப்பை கேட்டான். அக்கல்லை வாங்கி பலமுறை பரிசோதித்துவிட்டு இந்த அருமையான் மாணிக்க கல் உனக்கு எங்கே கிடைத்தது? ஒட்டு மொத்த உலகத்தையே விற்றுகொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணை இல்லை என்று கூறினார். குழப்பமடைந்த நம் நண்பன் கடவுளை பார்த்து நடந்ததை எல்லாம் கூறினான். அதற்கு கடவுள் சொன்னார், பார்த்தாயா,. ...